சீனா வர இந்தியர்களுக்கு அழைப்பு; வரும் 22 முதல் ஆன்லைன் விசா
9 மார்கழி 2025 செவ்வாய் 04:00 | பார்வைகள் : 128
சீனா செல்ல விரும்பும் இந்தியர்கள் இணையதளம் வாயிலாக விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என டில்லியில் உள்ள அந்நாட்டு துாதரகம் தெரிவித்துள்ளது. இதற்காக வரும் 22ம் தேதி பிரத்யேக இணையதளம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே கடந்த 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சீன மக்கள் நம் நாட்டிற்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சுற்றுலா விசாவையும் மத்திய அரசு நிறுத்தியது. மேலும், நேரடி வான் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
நல்லுறவு
சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்புக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னையை பேச்சு மூலம் தீர்த்து கொள்வது, வர்த்தக உறவுகளை புதுப்பிப்பது என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த நவம்பர் மாதம், சீன நாட்டினருக்கு நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா விசாவை மீண்டும் வழங்க மத்திய அரசு முன் வந்தது. இதனால், இந்தியா - சீனா இடையே மீண்டும் நல்லுறவு துளிர்க்க ஆரம்பித்தது.
இதன் அடுத்த கட்டமாக நம் நாட்டில் இருந்து சீனா செல்ல விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என டில்லியில் உள்ள அந்நாட்டு துாதரகம் அறிவித்துள்ளது.
வரும் 22ம் தேதி இதற்கான இணையதளம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்றும், போதிய ஆவணங்களை சமர்பித்து தங்கள் நாட்டுக்கு வர விரும்பும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்க முடியாது
'சீனாவின் எந்தவொரு நகரம் வழியாக செல்லும் இந்தியர்களையும் தடுப்புக் காவலில் வைத்து துன்புறுத்துவதை ஏற்க முடியாது. சர்வதேச பயண விதிகளை சீனா கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்' என, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan