"அந்த மோசமான நாய்க்குட்டிகள் இங்கே இருந்தால், நாங்கள் அவர்களை வெளியே எறிந்து விடுவோம்!": பிரிஜிட் மக்ரோனின் கருத்தால் சர்ச்சை!!
8 மார்கழி 2025 திங்கள் 21:39 | பார்வைகள் : 442
பரிசின் ஃபோலி பெர்ஜேர் அரங்கில் (salle parisienne des Folies Bergère) நகைச்சுவையாளர் ஆரி அபிட்டானின் (Ary Abittan) நிகழ்ச்சியை #NousToutes பெண்ணிய செயற்பாட்டாளர்கள் நான்கு பேர் முகமூடி அணிந்து “அபிட்டான் கற்பழிப்பவன்” எனக் கோஷமிட்டு சனிக்கிழமை மாலை இடைநிறுத்தினர்.
இடையூறுக்கு அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை, பிரிஜிட் மக்ரோன் தனது மகள் திபேன் ஒசியேர் உடன் ஆரி அபிட்டானின் நிகழ்ச்சியை பார்க்கச் சென்றார். வார இதழான பப்ளிக் வலைத்தளத்தால் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் , முதல் பெண்மணி மேடையில் ஏறுவதற்கு முன்பு ஆரி அபிட்டனுக்கு மேடைக்குப் பின்னால் தனது ஆதரவை வழங்குவதைக் காணலாம்.
"எனக்கு பயமாக இருக்கிறது," என்று அவர் முதல்பெண்மணியிடம் கூற "அந்த மோசமான நாய்க்குட்டிகள் இங்கே இருந்தால், நாங்கள் அவர்களை வெளியே எறிவோம்!" பிரிஜிட் மக்ரோன் சிரித்தபடி பதிலளித்தார். "
2021ல் ஒரு இளம்பெண் அபிட்டானை கற்பழிப்பில் குற்றம்சாட்டியபோதும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது; இருப்பினும் பெண்ணிய குழுக்கள் அவரின் மேடை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத்துக்கள் X வலைதளத்தில் அரசியல் எதிர்ப்பை எழுப்பி, பலர் பிரிஜிட் மக்ரோன் பெண்ணிய செயற்பாட்டாளர்களை அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலாக, அவரது அணியினர், “அவர் கண்டித்தது செயற்பாட்டாளர்களின் முகமூடி அணிந்து நிகழ்ச்சியை சீர்குலைக்கும் தீவிரமான முறையையே தவிர அவர்களின் போராட்டத்தைக் குறைக்கும் நோக்கமில்லை” என்று விளக்கி உள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan