Paristamil Navigation Paristamil advert login

வாகனம் : இந்த பழுதை பார்க்காவிட்டால் தொழில்நுட்ப ஆய்வில் சிக்கல்!!

வாகனம் : இந்த பழுதை பார்க்காவிட்டால் தொழில்நுட்ப ஆய்வில் சிக்கல்!!

8 மார்கழி 2025 திங்கள் 18:15 | பார்வைகள் : 367


தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள வாகங்களில் பொருத்தப்பட்டுள்ள d'airbags Takata பழுதுபார்த்திராவிட்டால், தொழில்நுட்ப ஆய்வில் ( contrôle technique) குறித்த மகிழுந்துகள் அனுமதி பெறாது என தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 1, 2026 முதல் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. அவ்வாறு  contrôle technique சான்றிதழ் அளிக்காத வாகனங்கள் வீதிகளில் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மகிழுந்துகளில் பொருத்தப்பட்டுள்ள உயிர்க்கவசமான ‘d'airbags Takata’ இன் மீது அண்மைய நாட்களில் கடும் விமர்சங்கள் எழுந்துள்ளன. அதை அடுத்தே, பிரான்சின் போக்குவரத்து அமைச்சகம் இந்த தவலை வெளியிட்டுள்ளது. 

இவ்வகை d'airbags Takata பழுதடைந்து மட்டும் 20 பேர் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்