Paristamil Navigation Paristamil advert login

இறால் பிரியாணி..

இறால் பிரியாணி..

8 மார்கழி 2025 திங்கள் 15:18 | பார்வைகள் : 114


பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவாக உள்ளது. அதில் சிக்கன், மட்டன் பிரியாணியை தவிர்த்து இறால் பிரியாணியும் அசைவ பிரியர்களின் டாப் லிஸ்ட்டில் உள்ளது. கம கமன்னு மணக்கும் இறால் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : இறால், பாஸ்மதி அரிசி, எண்ணெய், பிரியாணி இலை, முந்திரி, பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி, தக்காளி, பச்சைமிளகாய், பிரியாணி மசாலா, மிளகாய் தூள்.

செய்முறை : அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, முந்திரி, நான்கு நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து கொண்டு நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, மூன்று தக்காளி நறுக்கி அதனையும் சேர்த்து நன்றாக வதக்கி அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன், சுத்தம் செய்து வைத்த இறாலை அதில் போட்டுவிட்டு பிரியாணி மசாலை, மிளகாய் தூள் சேர்த்து மசாலா அனைத்திலும் படும்படி ஒருசேரும் வரை கிளறி விடவும்.

பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, ஊற வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு மிக்ஸ் செய்யவும். பின் நெய் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து வாழை இலையை வைத்து மூடி அரைமணி நேரம் தம் வைத்து எடுத்தால் அசத்தலான டேஸ்ட்ல இறால் தம் பிரியாணி ரெடியா இருக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்