தொடருந்தில் வைத்து 6 வயது மகனை கொடூரமாக தாக்கிய தாய்! - கைது!!
8 மார்கழி 2025 திங்கள் 09:28 | பார்வைகள் : 3001
TGV தொடருந்தில் வைத்து 6 வயதுடைய மகனைத்தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று Lille (Nord) இல் இருந்து Nîmes (Gard) நகரி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த TGV தொடருந்தில் பயணித்த 42 வயதுடைய பெண் ஒருவர் அவரது 6 வயது மகளை மிக மோசமாக தாக்கியுள்ளார்.
தொடருந்தில் பயணித்த பயணிகள் காவல்துறையினருக்கு தெரிவித்த தகவல்களை அடுத்து குறித்த பெண் தேடப்பட்டார். இறுதியாக அவர் Lagny-sur-Marne நகர காவல்துறையினரால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததன் படி, குறித்த சிறுமியின் தலையை பிடித்து தொடருந்ந்துடன் இடித்ததாக தெரிவிக்கப்பட்டது. பலர் 3117 எனும் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறதூ.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan