கார் விளக்குகள் இப்போது அதிகப்படியான பிரகாசமா?
8 மார்கழி 2025 திங்கள் 07:36 | பார்வைகள் : 407
கார் எல்இடி (LED) முன்விளக்குகள் அதிகப்படியான பிரகாசத்தால் வாகன ஓட்டிகளுக்கு கடும் தொந்தரவு ஏற்படுத்துகிறது. பழைய குமிழ் விளக்குகளை விட பத்து மடங்கு சக்திவாய்ந்த எல்இடி விளக்குகள், குறிப்பாக இரவு நேரம் மற்றும் வெளிச்சம் குறைவான சாலைகளில், ஓட்டுனர்களை கண்கள் கூச செய்து, விபத்துகளுக்கான அபாயத்தை அதிகரித்துள்ளன.
எஸ்யூவிகளின் (suv) உயரமான விளக்குகள் இந்த பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. கண் கூசுவது காரணமாக பாதசாரிகளை கவனிக்க முடியாமல் விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக ஊடகங்கள் அடிக்கடி தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சுகாதார பாதுகாப்பு அமைப்புகள் எல்இடி விளக்குகளின் தாக்கத்தை குறைக்க உற்பத்தியாளர்களிடம் மாற்றங்களை கோருகின்றன. ஆனால் பிரச்சனை எல்இடி தொழில்நுட்பம் மட்டுமல்ல; தவறாக அமைக்கப்பட்ட முன்விளக்குகளும் முக்கிய காரணமாக உள்ளன.
“வாகனத்தில் சுமை ஏற்றும்போது, முன்விளக்குகள் மேலே நோக்கி செல்வது சாதாரணம். அப்போது, இந்த சக்கரம் அவற்றை சரியான நிலையில் மீண்டும் அமைக்க உதவும். ஆனால் வாகனசுமையை இறக்கிவிட்ட பிறகும் அதை 3-ல் வைத்திருந்தால், முன்விளக்குகள் தவறாக இருக்கும்,” என AD Expert Savigny-sur-Orge (Essonne) நிறுவனத்தின் மெக்கானிக் ரோமேன் புலியோ விளக்குகின்றார்.
“விபத்துகளைத் தவிர்க்க போதுமான பிரகாசம் இருக்க வேண்டும் என்ற பல விதிமுறைகள் உள்ளன. ஆனால், இந்த ஒளியை நேருக்கு நேர் பெறும் நபரின் கண்களுக்கான சுகாதார ஆபத்துகள் குறித்த எந்த விதிமுறைகளும் இல்லை,” என ANSES அமைப்பின் விஞ்ஞானத் திட்ட மேலாளர் தினா அட்டியா கூறுகிறார்.
சங்கங்கள், வாகன ஓட்டிகள் தங்கள் முன்விளக்குகளை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என பரிந்துரைக்கின்றன. இங்கிலாந்து 2027 முதல் தானியங்கி முன்விளக்கு அமைப்பு கட்டாயமாக்கும் சட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan