Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் காதலிக்க விரும்பும் ஆண்களின் தொழில்கள்

பெண்கள் காதலிக்க விரும்பும் ஆண்களின் தொழில்கள்

8 மார்கழி 2025 திங்கள் 05:22 | பார்வைகள் : 128


"கண்டதும் காதல்" என்பதெல்லாம் திரைப்படங்களில் மட்டும்தான். நிஜ வாழ்க்கையில் யாரும் ஒருவரை பார்த்தவுடன் காதலில் விழ மாட்டார்கள். அவர்கள் யார், அவர்களின் படிப்பென்ன, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு காதலிப்பதுதான் ஒருவரின் எதிர்காலத்திற்கு நல்லது. குறிப்பாக ஆண்களை விட பெண்கள் இந்த விஷயங்களை கவனிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

காதலில் ஈர்ப்பைப் பொறுத்தவரை பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் ஒரு ஆணின் வேலை இதில் மிகவும் முக்கியமானதாகும். ஆண்களின் வேலைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வெவ்வேறு பெண்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையில் பெரிதும் மாறுபடலாம். திரைப்படங்களில் மட்டும்தான் பெண்கள் வேலையில்லாத ஆண்களை துரத்தி துரத்தி காதலிப்பார்கள், ஆனால் எதார்த்தம் முற்றிலும் வேறு. சில வேலைகளில் இருக்கும் ஆண்கள் மற்றவர்களை விட பெண்களை எளிதில் ஈர்ப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த துறையில் இருக்கும் ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

 

சுகாதார நிபுணர்கள்

 

சுகாதாரத் துறையில் இருப்பவர்கள், குறிப்பாக மருத்துவர்கள் பெண்களை ஈர்ப்பதில் முதலிடத்தில் உள்ளனர், பெரும்பாலும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். பெண்கள் இதை துறை ஆண்களை விரும்ப காரணம் அவர்களின் அக்கறை, புத்திசாலித்தனம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையாகும். மருத்துவர்களுக்கு இருக்கும் அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் அந்த துறையின் கண்ணியத்தை பெண்கள் மதிக்கிறார்கள்.

 

பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள்

 

இன்ஜினியரிங்கை நாம் எவ்வளவுதான் கலாய்த்தாலும் இப்போதும் அதற்கென தனி மதிப்பு உள்ளது. அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல பெண்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள ஆண்கள் மீது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வேலை சிக்கல் தீர்க்கும் திறன்களையும் பகுப்பாய்வு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதால் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

 

பைனான்சியல் மற்றும் அக்கவுண்டண்ட்ஸ்

 

நிதி மற்றும் அக்கவுண்ட் துறையில் உள்ள ஆண்களையும் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள், இந்த துறை அதிக பணம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை வழங்குவதால் பெண்களால் விரும்பப்படும் துறையாக உள்ளது. பணத்தை திறம்பட நிர்வகிக்கக்கூடிய மற்றும் புத்திசாலித்தனமான முடிவெடுக்கும் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய ஆண்களிடம் பெண்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.

 

ஆசிரியர்கள்

 

கற்பித்தல் ஒரு உன்னதமான தொழிலாகக் கருதப்படுகிறது, மேலும் புத்திசாலித்தனத்தையும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும் மதிக்கும் பெண்களுக்கு இது மிகவும் பிடித்த வேலையாக இருக்கும். கல்வியாளர்கள் பொறுமை, புரிதல் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறார்கள், இவை ஒரு துணையிடம் பெண்கள் எதிர்பார்க்கும் முக்கிய பண்புகளாகும்.

 

கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள்

 

பெரிய வருமானம் இல்லாத போதிலும் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பிற படைப்பாற்றல் வல்லுநர்கள் ஆர்வம், கற்பனை மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ள ஆண்களிடம் பெண்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறை பல பெண்களின் ஆர்வத்தைத் தூண்டும்.

 

காவல்துறை மற்றும் இராணுவம்

 

காவல்துறை அல்லது இராணுவ சேவை சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு என்று ஒரு தனி மரியாதையும், கவர்ச்சியும் உண்டு. இந்த துறைகள் பெரும்பாலும் துணிச்சல், பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்புடையவை, இது பல பெண்களுக்கு கவர்ச்சிகரமான குணங்களாக இருக்கலாம்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்