Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவுக்கு வாழ்வா சாவா பிரச்சனை! - சீனாவை மிரட்டும் மக்ரோன்!!

ஐரோப்பாவுக்கு வாழ்வா சாவா பிரச்சனை! - சீனாவை மிரட்டும் மக்ரோன்!!

7 மார்கழி 2025 ஞாயிறு 18:07 | பார்வைகள் : 2506


சீனா - ஐரோபாக்களிடையே வர்த்தக பற்றாக்குறையை சீனா சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் அமெரிக்கா எதிர்கொண்டது போல் அதிக வரியை சீன பொருட்களுக்கு செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மக்ரோன் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனாவுக்கும் -ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் நடுநிலமை இல்லை எனவும், சீனா கொள்முதல் செய்வதை விடவும் அதிகளவில் ஏற்றுமதி (ஐரோப்பாவுக்கு) செய்கிறது என சுட்டிக்காட்டிய மக்ரோன், இதனை சமப்படுத்த சீனா தவறினால் சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு செய்வது தவிர்க்கமுடியாததாக மாறும் என  மக்ரோன் குறிப்பிட்டார்.

சீனாவில் தொழில்துறை பெருவளர்ச்சியை கண்டதன் பின்னர், ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இயந்திரங்கள், இலத்திரனியல், வாகனங்கள், உதிரிப்பாகங்கள் என பெருமளவில் சந்தை விலைக்கு போட்டியாக ஏற்றுமதி செய்து வருகிறது. 

இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வு ஐரோபாவுக்கு வாழ்வா சாவா பிரச்சனையை கொண்டுவருகிறது என மக்ரோன் குறிப்பிட்டார். அத்தோடு ஐரோப்பிய ஒன்றிய ஒன்றியத்துக்கு வரி அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையையும் வைத்தார். 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்