விரிவான விசாரணை நடத்தணும்; கோவா தீ விபத்து சம்பவத்தில் ராகுல் வலியுறுத்தல்
8 மார்கழி 2025 திங்கள் 06:24 | பார்வைகள் : 139
கோவாவில் 25 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் அரசு கிரிமினல் தோல்வியடைந்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள இரவு விடுதியில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவாவில் 25 பேரின் உயிரை பறித்த தீவிபத்து வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
இது சாதாரண விபத்து அல்ல. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட கிரிமினல் தோல்வி. விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணை நடத்துவதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan