Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோனை வசைபாடிய சர்கோஷி! - புத்தகம் வெளியீடு!

ஜனாதிபதி மக்ரோனை வசைபாடிய சர்கோஷி! - புத்தகம் வெளியீடு!

7 மார்கழி 2025 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 799


முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையானமை அறிந்ததே. அவரது சிறைச்சாலை அனுபவங்களைக் கொண்டு அவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இன்னும் சில நாட்களில் அப்புத்தம் வெளியிடப்பட உள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக லிபிய ஜனாதிபதி கடாஃபியிடம் நிதியினை பெற்று சட்டவிரோதமாக அதனை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியிருந்தார் எனபதே அவர் மீதான வழக்கு. குற்றம் உறுதி செய்யப்பட்டு 14 ஆம் வட்டாரத்தில் உள்ள  prison de la Santé சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டு, 20 நாட்களின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த 20 நாட்கள் சிறை அனுபவத்தைக் கொண்டு அவர் ”Le journal d'un prisonnier” எனும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அது இம்மாதம் 10 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்த புத்தகத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களால் வசைபாடியதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் சிறைக்குச் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எலிசே மாளிகைக்கு அழைக்கு சர்கோஷியை சந்தித்திருந்தார்.

அத்தோடு அவருக்கு வழங்க்கப்பட்டிருந்த உயரிய கெளரமான Légion d'honneur இனை மீளப்பெறவேண்டும் எனவும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது சிறை அனுபவ புத்தகத்தில் மக்ரோனை சரமாரியாக விமர்சித்து, வசை பாடியதாக தெரிவிக்கப்படுகிறது. 216 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தினை Fayard நிறுவனம் வெளியிடுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்