Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அனர்த்தங்களால் 4500 வீடுகள் முழுமையாக சேதம்!

இலங்கையில் அனர்த்தங்களால் 4500 வீடுகள் முழுமையாக சேதம்!

7 மார்கழி 2025 ஞாயிறு 12:01 | பார்வைகள் : 173


டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தங்களால் 76,066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 1800 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அந்த மாவட்டத்தில் 13,044 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அதற்கு அடுத்ததாக புத்தளம் மாவட்டத்தில் 573 வீடுகள் முழுமையாகவும் 4696 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் 480 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் 404 வீடுகள் முழுமையாகவும் 7291 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகள் முழுமையாகவும், 11,575 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாகவும் 453 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்