இலங்கையில் உலக்கையால் தாக்கி கணவனை கொலை செய்த மனைவி
7 மார்கழி 2025 ஞாயிறு 12:01 | பார்வைகள் : 909
திருமணமான பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் ஆனந்த சிசிரகுமார (67), இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார்.
குடும்ப தகராறு அதிகரித்தபோது, மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி, 67 வயது ஓய்வு பெற்ற பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan