சட்டவிரோத நடவடிக்கை - பிரெஞ்சு கடற்கரை எல்லையில் ரஷ்யர் ஒருவர் கைது!!
7 மார்கழி 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 1692
சட்டவிரோதமாக நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தி வர முயன்ற ரஷ்யர் ஒருவர சுங்கவரித்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலே பகுதியால் நாட்டுக்குள் நுழைந்த கனரக வாகனம் ஒன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 250 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சுங்கவரித்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 12 மில்லியன் யூரோக்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளது. கனரக வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், வாகனத்தின் கூரை மற்றும் அதன் பக்க சுவர்களில் மிக நூதனமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்தின் சாரதில் 40 வயதுடைய ரஷ்ய குடியுரிமை கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan