மிஸ் பிரான்ஸ் 2026 பட்டத்தை வென்ற ஹினௌபோகோ தேவேஸ் யார்?
7 மார்கழி 2025 ஞாயிறு 08:21 | பார்வைகள் : 5004
தஹிதியைச் சேர்ந்த (Tahiti) ஹினௌபோகோ தேவேஸ், (Hinaupoko Devèze) 2026இற்கான மிஸ் பிரான்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
தஹிதியில் பிறந்து பிரெஞ்சு பாலினேசியா மற்றும் பிரான்சின் தெற்கு பகுதிகளில் வளர்ந்த அவர், மனையியல் படிப்பைத் தொடர்ந்தபோது மிஸ் பிரான்ஸ் போட்டியில் இணைந்துள்ளார். தற்போது சுற்றுலா துறையில் பணியாற்றும் அவர், 2020ஆம் ஆண்டில் அனுபவித்த கடுமையான மனஅழுத்தத்திற்குப் பிறகு மனநலத்தை தனது முக்கிய காரணமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
« இது என் மக்களின் வெற்றி » என்று அவர் அழகு ராணியாக முடி சூட்டப்பட்ட பின் உணர்ச்சி மிகுதியாக தெரிவித்துள்ளார். மார்டினிக்கில் தயாரிப்பு பயணத்தின் போது நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், தற்போது சிறையில் உள்ள ராப்பர் Koba LaDஇன் க்லிப்பில் தோன்றியதற்கும் அவர் அமைதியாக பதிலளித்து, தவறான தகவல்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
19 வயதில் மாடலாக இருந்தபோது அந்த க்லிப்பில் (clip de rap) நடித்தது ஒரு சாதாரண தொழில்வாய்ப்பு என்றும் அவர் விளக்கியுள்ளார். தனது கவர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் தெளிவான பதில்களால், ஹினௌபோகோ தேவேஸ் மிஸ் பிரான்ஸ் 2026 பட்டத்துடன் பிரான்சின் புதிய அழகி இராணியாக உயர்ந்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan