Nanterreஇல் உள்ள ஒரு பாடசாலைக்குள் போதை விற்பனையாளர்களுக்கு இடையில் சண்டை!!
6 மார்கழி 2025 சனி 21:00 | பார்வைகள் : 2001
நாந்த் (Nanterre-Hauts-de-Seine) பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், டிசம்பர் 2 அன்று முகமூடி அணிந்த இரு குழுக்களிடையே இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் தன்னைத் துரத்தி வந்த குழுவிலிருந்து தப்பிக்க பள்ளியின் கதவைத் தாண்டி உள்ளே வந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் சிறு குழந்தைகள் முன்னே நடந்ததால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனனர். மேலும் பாடசாலையின் பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேயர் déplore Raphaël Adam, “பாடசாலையின் கதவை மீறி உள்ளே வந்தது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார். இந்த பகுதியில் செயல்படும் ஒரு போதைப் பொருள் கும்பலே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்படுகிறது.
அருகிலுள்ள குடியிருப்புகளில் தினமும் போதை விற்பனை நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு ஒரு பெண் நேர்காணல் வழங்கும் பொழுது ஒரு இளைஞன் மிரட்டியதால் அவர் தன் பேட்டியை பாதியிலேயே நிறுத்தினார், இது பள்ளி முன் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பின்னர் முகமூடி அணிந்த சந்தேகத்திடமான இளைஞர்கள் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan