Sartrouville : ஓடும் பேருந்துக்குள் சரமாரி கத்திக்குத்து தாக்குதல்! - மூவர் காயம்!!!
6 மார்கழி 2025 சனி 20:00 | பார்வைகள் : 2290
பேருந்தில் பயணித்த பயணிகள் மீது திடீர் தாக்குதல் மேற்கொண்ட 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12.40 மணி அளவில் Sartrouville (Yvelines) புறப்பட்ட பேருந்து ஒன்று Cergy (Val-d'Oise) நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. தரிப்பிடம் ஒன்றில் இருந்து பேருந்துக்குள் ஏறிய 26 வயதுடைய ஒருவர், திடீரென கத்தி ஒன்றின் மூலம் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
பயணிகள் மூவர் கத்திக்குத்துக்கு இலக்காகினர். பேருந்துக்குள் இருந்த பயணிகள் மிகவும் அச்சமடைந்து சத்தமாக கத்தி குரல் எழுப்பினர்.
18 - 24 மற்றும் 25 வயதுடைய மூவரே காயமடைந்துள்ளனர். 2 செ.மீ ஆழம் வரை கத்தி வெட்டப்பட்ட காயங்களுடன் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நோக்கம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan