நான்குமுனைச் சந்திப்பு! - லண்டன் பயணமாகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!
6 மார்கழி 2025 சனி 18:08 | பார்வைகள் : 198
நாளை மறுநாள் திங்கட்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இலண்டன் பயணமாக உள்ளார். அங்கு வைத்து இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் மற்றும், யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியையும் மற்றும் ஜேர்மனி சான்சிலர் Friedrich Merz ஆகியோரைச் சந்திக்கிறார்.
எலிசே மாளிகையில் வைத்து செலன்ஸ்கியை சந்தித்து ஒருவாரத்தின் பின்னர் மீண்டும் இந்த சந்திப்பு லண்டனில் வைத்து இடம்பெறுகிறது.
ரஷ்யாவுக்கு தொடர் அழுத்தங்களை வழங்கவும், கீவ்வுக்கான ஆதரவை தொடர்ந்து வலுப்படுத்தவும் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.
இன்று டிசம்பர் 6, சனிக்கிழமை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் கீவ்-யுக்ரேன் தரப்பினரிடையே பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது விமர்சனங்களை சந்தித்துள்ளபோதும், யுக்ரேனுக்கான ஆதரவில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan