பாகிஸ்தான்-தலிபான் இடையே மீண்டும் வெடித்த மோதல்
6 மார்கழி 2025 சனி 15:42 | பார்வைகள் : 2566
பாகிஸ்தான் மற்றும் தலிபான் இடையிலான எல்லை மோதல் மீண்டும் வெடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகளுக்கும், பாகிஸ்தானின் ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் மீண்டும் எல்லைப் பகுதியில் வெடித்துள்ளது.
இந்த மோதலில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தம் மீறப்பட்டதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த எல்லை பதற்றம் காரணமாக சுமார் 1,600 மைல் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் ஸ்பின் போல்டாக் பகுதி மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் மோதலில் இரண்டு தரப்பிலும் பலத்த சேதங்கள் பதிவாகியுள்ளது.
கந்தஹாரில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு 4 பேரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதே போல பாகிஸ்தானில் குறைந்தது 3 பேர் வரை காயமடைந்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan