மகப்பேறு மற்றும் தந்தை விடுப்புகள் அதிகரிப்பு!!
6 மார்கழி 2025 சனி 15:27 | பார்வைகள் : 2387
2026 ஜனவரி 1 முதல் புதிய பிறப்பு விடுப்பு அமல்படுத்த தேசிய சட்டசபை பெரும்பான்மையாக 220 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகப்பேறு மற்றும் தந்தை விடுப்புகளுக்கு (congés maternité et paternité) மேலதிகமாக வழங்கப்படும் இந்த விடுப்பு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களாக இருக்கும், மேலும் அதை இரண்டு ஒரு மாத காலங்களாக பிரித்தும் எடுக்கலாம்.
முதல் மாதத்திற்கு ஊதியத்தின் 70% மற்றும் இரண்டாம் மாதத்திற்கு 60% வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் 2027 என திட்டமிடப்பட்டிருந்த செயல்பாட்டுக்காலம், எம்.பி.க்களின் வலியுறுத்தலால் 2026 ஆக முன்னோக்கி மாற்றப்பட்டுள்ளது.
பல எம்.பி.க்கள் பெற்றோரிடமிருந்து அதிக கோரிக்கைகள் வந்ததாக கூறி, இந்த விடுப்பை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அரசு தொழில்நுட்ப சிக்கல்களை முன்வைத்து செயல்பாட்டை தள்ளிப் போட முயற்சிக்கிறது.
தந்தைகளுக்கு நெகிழ்வான விடுப்பு வழங்குவது குடும்ப உறவை வலுப்படுத்தும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர், அதே நேரத்தில் விரைவான ஆனால் தரமற்ற செயல்படுத்தல் ஈட்டுத்தொகை வழங்கலில் தாமதத்தை ஏற்படுத்தி, நிலைமையை மோசமாக்கலாம் என அரசு எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan