ஒட்டக இறைச்சி உட்கொண்ட பிரான்ஸ் பயணிகள் இருவருக்கு MERS கொரோனா!!
6 மார்கழி 2025 சனி 08:00 | பார்வைகள் : 507
பிரான்சில் ஓமான் பயணத்திலிருந்து திரும்பிய இரண்டு பேருக்கு MERS கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
35 பேர் கொண்ட குழுவுடன் பயணம் செய்த இவர்களில் இருவரும் ஒட்டக இறைச்சி சாப்பிட்டிருந்தனர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவாமல் தடுக்க, மருத்துவ அதிகாரிகள் தொடர்புடையவர்களை தொடர்பு கொண்டு பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை பிரான்சில் இரண்டாம் நிலை பரவல் எதுவும் கண்டறியப்படவில்லை.
MERS-CoV 2012-இல் சவூதி அரேபியாவில் தோன்றிய கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது. பொதுவாக இது மிருகங்களில் இருந்து மனிதருக்கு பரவுகிறது, ஆனாலும் மனிதர்களுக்கிடையே பரவுவது அரிது.
உலகளவில் இதுவரை 2,640 வழக்குகள் பதிவாகியுள்ளன. அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சில நேரங்களில் குடலியல் பிரச்சனைகள் காணப்படுகின்றன. இந்த பகுதிகளில் இருந்து திரும்பி அறிகுறிகள் காண்பவர்களுக்குத் தங்களை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan