பரிசை நோக்கி பறந்துவந்த A320 விமானம்! - சூரிச்சில் அவசர தரையிறக்கம்!!
6 மார்கழி 2025 சனி 07:00 | பார்வைகள் : 340
ரோம் நகரில் இருந்து புறப்பட்ட Airbus A320 விமானம் ஒன்று பரிசை நோக்கி பறந்துகொண்டிருந்த வேளை, திடீரென சுவிடசர்லாந்தின் சூரிச்சில் தரையிறக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 5, நேற்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாள்-து=கோல் விமானநிலையத்தில் தரையிறங்கவேண்டிய குறித்த விமானம், பரிசில் நிலவிய மிக கடுமையான புகைமூட்டம் காரணமாக திசை மாற்றப்பட்டது.
சாள்-து-கோலில் ஓடுபாதையின் மேலே 400 மீற்றர் நீளத்துக்கு மிக கடுமையான புகைமூட்டம் படர்ந்திருந்ததாகவும், இதனால் தரையிறங்க தேவையான போதுமான தெளிவான ஓடுபாதை தென்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் விமானம் சுவிசர்லாந்துக்கு திருப்பு அனுப்பப்பட்டு, சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் சிலமணிநேரம் சூரிச்சில் தரித்து நின்று, முற்பகல் 11 மணி அளவில் பரிசுக்கு வருகை தந்தது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan