Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிகச் சிறிய நீர் எருமை கின்னஸ் சாதனை

உலகின் மிகச் சிறிய நீர் எருமை கின்னஸ் சாதனை

6 மார்கழி 2025 சனி 06:18 | பார்வைகள் : 114


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மலாவாடியைச் சேர்ந்த மூன்று வயது நீர் எருமை, உலகின் மிகச் சிறிய நீர் எருமை என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

இந்த நீர் எருமை திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்தது. 

ராதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நீர் எருமை 2 அடி 8 அங்குலம் (83.8 செ.மீ) உயரம் கொண்டது.

 

உலகின் மிகவும் குட்டையான பெண்ணாக அறியப்படும் 2 அடி 0.7 அங்குலம் உயரமுடைய ஜோதி அம்கேவை (இந்தியா) விட ராதா உயரமானது.

 

ராதா உலகின் மிக உயரமான உயிருள்ள நீர் எருமையான கிங் காங்கை (தாய்லாந்து) விட கிட்டத்தட்ட நான்கு அடி (1.2 மீ) உயரம் குறைவானது. 

கிங் காங் உயரம் 6 அடி 0.8 அங்குலம் (185 செ.மீ) ஆகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்