இரண்டாம் உலகப்போரின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஓவியம், 303 312 யூரோக்களுக்கு விற்பனை!!
5 மார்கழி 2025 வெள்ளி 23:06 | பார்வைகள் : 2191
ஒகஸ்ட் ரெனோவரின் (Auguste Renoir) "லவுஸ்" (La Laveuse) எனப்படும், இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ஓவியம், அதன் உரிமையாளரான ஹங்கேரிய வம்சாவளியைச் சேர்ந்த யூதக் கலை வணிகர் Alfred Weinbergerஇன் வாரிசுகளுக்கு மீட்கப்பட்ட பின்னர், பரிஸின் l'Hôtel Drouotஇல் ஏலத்தில் 303 312 யூரோக்களுக்கு இன்று விற்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1916 ஆண்டுகளில் வரையப்பட்ட இந்த 30x35 செ.மீ அளவுடைய ஓவியம், ரெனோவரின் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட இவ் ஓவியம் வண்ணத் துளிகளால் வரையப்பட்ட மூன்று பெண் உருவங்கள் ஒன்றுகூடி நீர்நிலைக்கு முன்பாக இருக்கும் படைப்பாக இது தோன்றுகிறது. நாசிகள் பறிமுதல் செய்த வைன்பெர்கரின் முழு சேமிப்பகத்தில் ரெனோவரின் ஐந்து படைப்புகளும், ஓர் டெலக்ரோவின் (delacroix)படைப்பும் இருந்துள்ளன.
இந்த "லவுஸ்", 2023 ஆம் ஆண்டு ஒரு மரபுரிமை சோதனையின் போது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. ஏல விற்பனைக்குப் பிறகு மேற்கொண்ட ஆய்வில் இது நாசிகளால் பறிமுதல் செய்யப்பட்ட படைப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெயர் மாற்றங்கள் காரணமாக தரவுத் தளங்களில் இது அடையாளம் காணப்படாமல் போயிருந்தது என்று ஏல அதிகாரி அலெக்ஸாண்ட்ர் கிகுவெலோ (Alexandre Giquello) விளக்கியுள்ளார்.
இதேவேளை, ரெனோவரின் மற்றொரு ஓவியம் "L’Enfant et ses jouets" நவம்பர் 25 அன்று 1.8 மில்லியன் யூரோக்கு விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan