Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : சென் நதிக்குள் பாய்ந்த மகிழுந்து!!

பரிஸ் : சென் நதிக்குள் பாய்ந்த மகிழுந்து!!

5 மார்கழி 2025 வெள்ளி 19:00 | பார்வைகள் : 295


சென் நதிக்கு அருகே இருந்த தரிப்பிடத்தில் நின்றிருந்த மகிழுந்து ஒன்று மெல்ல நகர்ந்து நதிக்குள் விழுந்துள்ளது. மகிழுந்தில் இருந்த இருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின்  Georges Pompidou எக்ஸ்பிரஸ் வீதியில் இச்சம்பவம் இன்று டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. Renault Clio மகிழுந்து ஒன்றில் பயணித்த தம்பதியினர் இருவர், அங்குள்ள  தரிப்பிடம் ஒன்றில் மகிழுந்தை நிறுத்திவிட்டு உறங்கியுள்ளனர். 

அதிகாலை 3 மணி அளவில் மகிழுந்து மெல்ல நகர்ந்துள்ளது. உறக்கத்தில் இருந்த இருவரும் இதனை கவனிக்கவில்லை. சில மீற்றர் தூரம் நகர்ந்து சென்ற மகிழுந்து, சென் நதிக்குள் விழுந்துள்ளது. 

அதிஷ்ட்டவசமாக மகிழுந்தின் கண்ணாடிகள் திறந்திருந்ததால், இருவரும் தண்ணீருக்குள் இருந்து நீந்தி வெளியேறி, அவசர உதவிக்கு அழைத்துள்ளனர். 16 ஆம் வட்டார காவல்துறையினர் மீட்புப்பணிக்கு விரைந்து வந்துள்ளனர். 

தம்பதியினர் இருவரும் காயமின்றி மீட்கப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்