விலைமதிப்பற்ற நகையை விழுங்கிய திருடன் - அதிர்ச்சியில் அதிகாரிகள்
5 மார்கழி 2025 வெள்ளி 12:28 | பார்வைகள் : 117
நியூசிலாந்தில் முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற நகையை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய நகை கடையில் இருந்து புகழ்பெற்ற ஃபேபர்ஜ்(Faberge) முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட பச்சை நிறப் பதக்கம் ஒன்றை திருட முயற்சி நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 32 வயது நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பச்சை நிறப் பதக்கத்தை திருடும் நோக்கத்துடன் விழுங்கியதை அடுத்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் US$20,000 மதிப்புள்ள இந்த அழகிய ஆபரணம் திருடனிடம் இருந்து இதுவரை மீட்கப்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அசாதாரண சூழ்நிலையை குறிப்பிட்ட பொலிஸார், திருடனின் செரிமான உறுப்புகளில் இருந்து இயற்கையாக வெளியேறும் வரை காத்திருப்பதாகவும், இந்த வித்தியாசமான பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுங்கப்பட்ட இந்த ஃபேபர்ஜ்(Faberge) முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற பச்சை நிறப் பதக்கம் கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Octopussy மூலம் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan