Paristamil Navigation Paristamil advert login

சிறுநீரகம் செயழிழந்த பண்டா! - சீனாவில் இருந்து பிரான்சுக்கு பதிய பண்டாக்கள்!!

சிறுநீரகம் செயழிழந்த பண்டா! - சீனாவில் இருந்து பிரான்சுக்கு பதிய பண்டாக்கள்!!

5 மார்கழி 2025 வெள்ளி 12:00 | பார்வைகள் : 186


சீனாவில் இருந்து பிரான்சுக்கு பண்டா கரடிகள் கொண்டுவரப்பட உள்ளன. 2027 ஆம் ஆண்டில் அவை பிரான்சுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக  zoo de Beauval  இன் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர், பிரான்சில் இருந்து  சீனாவுக்கு Yuan Zi மற்றும்  Huan Huan  ஆகிய இரு பண்டாக்கள் (வயது 13) மருத்துவ காரணங்களுக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவ்விரு பண்டாக்களும் சீனாவில் இருந்து பிரான்சுக்கு கொண்டுவரப்பட்ட பண்டா கரடி ஒன்றின் குட்டிகளாகும். 

இரு பண்டாக்களில் Huan Huan இற்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது. 

இந்நிலையில், 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் சில பண்டா குட்டிகள் பிரான்சுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்