Paristamil Navigation Paristamil advert login

1.15 பில்லியன் யூரோக்களுக்கு கவச வாகனங்களை விற்கும் பிரான்ஸ்!!

1.15 பில்லியன் யூரோக்களுக்கு கவச வாகனங்களை விற்கும் பிரான்ஸ்!!

5 மார்கழி 2025 வெள்ளி 07:49 | பார்வைகள் : 370


பிரான்ஸ், 1.15 பில்லியன் யூரோக்களில் 92 கிரிஃபான் (blindés Griffon) மற்றும் 123 செர்வால் கவச வாகனங்களை (véhicules Serval) பெல்ஜியத்திற்கு விற்கவுள்ளது. 

இந்த கொள்முதல் 2019-ல் தொடங்கிய CaMo என்ற இராணுவ கூட்டணியின் ஒரு பகுதியாகும். கிரிஃபோன் என்பது ஆறு சக்கரங்களைக் கொண்ட, 24 டன் எடையுள்ள பல-பங்கு கவச வாகனம் (VBMR) ஆகும், இது துருப்புக்களின் போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கையெறி ஏவுகணைகள் போன்ற பல்வேறு ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடிய தொலைவிலிருந்து இயக்கப்படக்கூடியது.

சர்வல் என்பது ஒரு பல்துறை வாகனம், ஆனால் இலகுவானது மற்றும் அதிக வேகமுடையது. 15 முதல் 17 டன் எடையுடைய மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்டுள்ளது.  துருப்புகளின் போக்குவரத்து, உளவு பார்த்தல், கிரிஃபோனை விட அதிக இயக்கம் மற்றும் குறைந்த சுமை தேவைப்படும் பல்வேறு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பெல்ஜிய நாடாளுமன்ற குழுவில் இரகசியமாக அறிமுகப்படுத்தப்பட்டது. KNDS நிறுவனம் தயாரிக்கும் இந்த வாகனங்கள் பல்வேறு பதிப்புகளுடன் கிடைக்கின்றன, குறிப்பாக டிரோன் எதிர்ப்பு, மின்னணு போர் மற்றும் மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு போன்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. 

பெல்ஜியம், இவை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் CaMo திட்டத்தின் கீழ் கூடுதல் 6 பில்லியன் யூரோக்களுக்கு பிரான்ஸ் நிறுவனங்களிடமிருந்து மேலும் பல வாகனங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்