2027 முதல் - வெப்பமூட்டியை கட்டுப்படுத்தும் கருவிகள் கட்டாயமா??
5 மார்கழி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3512
வீடுகளில் அல்லது நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப்பமூட்டிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் thermostats எனும் கருவிகள் பொருத்துவது 2027 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாகும் என சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த கருவிகள் மூலம், உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் நிலவும் குளிரை கண்காணித்து, அதற்கு ஏற்றால் போல் வெப்பமூட்டியில் இருந்து வெப்பத்தை வெளியிட இது உதவும். வெப்பத்தை குளிருக்கு ஏற்றால் போல் கூட்டவும், குறைக்கவும் இது உதவும். இது மின்சாரம் அல்லது எரிவாயு வீணாவதை தடுக்கிறது.
இவ்வகை கருவிகள் ஜனவரி 1, 2027 ஆம் ஆண்டு முதல் பொருத்துவது கட்டாயமானது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கருவிகள் பொருத்துவதை பிற்போடுவதாக அமைச்சர் Roland Lescure நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.
2030 ஆம் ஆண்டு ஜனவரி 1 வரை இந்த திட்டத்தை பிற்போடுவதாகவும், ‘இவ்வகை கருவிகளை வாங்கவும், பொருத்தவும் அதற்கு தயாராகவும் மேலும் காலம் வேண்டும். மேலும் தொழில் வல்லுனர்களும் இதற்கு ஏற்றால் போல் தயாராக வேண்டும். எனவே இது பிற்போடப்படுகிறது!” என குறிப்பிட்டார்.
அதேவேளை, சில வீடுகளில் இவ்வகை கருவிகள் பொருத்தப்பட்டு வெப்பமூட்டிகளின் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan