கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம்: அதிபர் புடினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய பதிப்பை பரிசளித்த மோடி
5 மார்கழி 2025 வெள்ளி 13:04 | பார்வைகள் : 101
இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு, பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் புடின் பங்கேற்றார். அதன்பின், சிறிது நேரம் இரு நாட்டு தலைவர்களும் உரையாடி, தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு இரவு 8.30 மணிக்கு, புடின் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பரிசாக வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan