பரிஸ் - உலகின் மிக அசுத்தமான சுற்றுலாநகரம்!
4 மார்கழி 2025 வியாழன் 17:00 | பார்வைகள் : 1558
உலகின் மிக அசுத்தமான சுற்றுலா நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரெஞ்சு தலைநகர் பரிஸ் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகள், எலித்தொல்லை, பராமரிக்கப்படாத சாலைகள் போன்றன பரிசை ஐந்தாவது இடத்தில் வைத்துள்ளதாக இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ள Radical Storage எனும் அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘உலகில் உள்ள மிக அசுத்தமான நகரங்களின் பட்டியலில் பரிஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது!’
அதேவேளை, கூகுள் மேப்பில் பதிவுசெய்துள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களின் மதிப்புரைகளையும் அவதானித்து, மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து, சுற்றுலாப்பயணிகளின் கருத்துக்களை செவிமடுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பரிசுக்கு வெறுமனே 28.2% சதவீத நன்மதிப்பு மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் ஹங்கேரியின் தலைநகர் புட்டபெஸ்ட் முதலிடத்திலும், இரண்டாம் இரத்தில் ரோம், மூன்றாம் இடத்தில் லொஸ் வேகாஸ், நான்காம் இடத்தில் இத்தாலியின் நகரமான ஃப்ளோரன்ஸ் ஆகியவை உள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan