Paristamil Navigation Paristamil advert login

கொவிட் கால கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தும் ஐரோப்பிய நாடு

கொவிட் கால கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தும் ஐரோப்பிய நாடு

4 மார்கழி 2025 வியாழன் 15:46 | பார்வைகள் : 292


ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், மீண்டும் மாஸ்க் அணிதல் முதலான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர திட்டமிட்டுவருகிறது.

 

குளிர்காலம் ஆரம்பிக்கும் நிலையில், ஸ்பெயின் நாட்டில் ப்ளூ காய்ச்சல் தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

 

ஆகவே, ப்ளூ பரவல் தொடர்பில் சுகாதார அமைச்சகம் நாடு முழுமைக்குமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் உள்ளூர் அரசுகளுடன் இணைந்து திட்டம் ஒன்றையும் தயார் செய்துவருகிறது.

 

ஸ்பெயின் அரசு, மாஸ்க் அணியும் வழக்கத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளதுடன், அதனால் தொற்று பரவல் தடுக்கப்படும் என்றும் ஏற்கனவே கோவிட் மற்றும் பிற சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சமாளிக்கத் திணறிவரும் மருத்துவமனைகளுக்கு சற்று அழுத்தத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

 

இந்நிலையில், ஸ்பெயினில் வெவ்வேறு இடங்களில் விதிகள் வெவ்வேறாக இருக்கும் என்பதால், ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர்கள் விதிகளைத் தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் ப்ளூ காய்ச்சல் அதிகரித்துவருகிறது. பிரித்தானியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டிலும் ப்ளூ அதிகரித்து வருவதால், மாஸ்க் அணிதல் முதலான பல கோவிட் காலகட்ட கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய ஸ்பெயின் அரசு திட்டமிட்டுவருகிறது. ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர்கள், விதிகளை அறிந்து அவற்றிற்கிணங்க நடந்துகொள்வது நல்லது.

வர்த்தக‌ விளம்பரங்கள்