Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனின் Donbas பிராந்தியத்தை கைப்பற்ற தயார் - புடின் சூளுரை

உக்ரைனின் Donbas பிராந்தியத்தை கைப்பற்ற தயார் - புடின் சூளுரை

4 மார்கழி 2025 வியாழன் 14:58 | பார்வைகள் : 170


உக்ரைன் படைகள் பின்வாங்காவிட்டால், அந்த நாட்டின் டான்பாஸ் பகுதியை ரஷ்யா வலுக்கட்டாயமாக முழுமையாகக் கைப்பற்றும் என்று புடின் சூளுரைத்துள்ளார்.

குறித்த பகுதியில் இருந்து வெளியேற உக்ரைன் படைகள் தொடர்ந்து மறுத்து வருகிறது. டான்பாஸில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய இராணுவத்திற்கும் இடையே எட்டு ஆண்டுகள் நடந்த சண்டைக்குப் பிறகு,

 

பெப்ரவரி 2022ல் விளாடிமிர் புடின் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை உக்ரைனுக்குள் அனுப்பினார். டான்பாஸ் பிராந்தியமானது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளால் ஆனது.

 

இந்தியா விஜயத்திற்கு முன்பு India Today செய்தி ஊடகத்திடம் உரையாடிய விளாடிமிர் புடின், ஒன்று நாங்கள் இந்தப் பிரதேசங்களை ஆயுத பலத்தால் விடுவிப்போம், அல்லது உக்ரேனியப் படைகள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேற வேண்டும் என்றார்.

 

ஆனால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அளித்த பதிலடியில், போர்க்களத்தில் ரஷ்யாவால் வெல்ல முடியாத எங்கள் சொந்தப் பகுதியை அந்த நாட்டிற்கு பரிசளிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.

 

போரைத் தொடங்கி, பேரிழப்பை ஏற்படுத்தி வரும் ரஷ்யாவிற்கு வெகுமதி அளிப்பதா என்றும் ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார். 2014ல் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்ட கிரிமியா உட்பட, உக்ரைனின் 19.2 சதவீத பகுதியை ரஷ்யா தற்போது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

 

அத்துடன், லுஹான்ஸ்க் முழுவதும், டொனெட்ஸ்க் பகுதியின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, கெர்சன் மற்றும் சபோரிஜியாவின் சுமார் 75 சதவீத பகுதி, மற்றும் கார்கிவ், சுமி, மைக்கோலைவ் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளின் சில பாகங்களையும் ரஷ்யா தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

 

டொனெட்ஸ்கின் சுமார் 5,000 சதுர கிமீ பகுதி உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான சமாதான ஒப்பந்தத்தின் வரைவு குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில்,

 

டான்பாஸ் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாக ரஷ்யா பலமுறை முறையிட்டுள்ளது. ஆனால், நிலத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையாக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்