இணையம் இல்லாமலே போனில் லைவ் கிரிக்கெட் பார்க்க முடியும்
4 மார்கழி 2025 வியாழன் 12:22 | பார்வைகள் : 126
இந்தியாவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் போட்டிகள், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றை தங்களது ஸ்மார்ட் போன் மூலம் நேரலையாக பார்த்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு இணைய இணைப்பு கட்டாய தேவையாக உள்ளது. இணையத்தின் வேகம் குறைவாக இருந்தால் கூட நேரலை சில நேரங்களில் தடைபடும்.
இந்நிலையில், இணைய இணைப்பு இல்லாமல் நேரலைகளை போன் மூலம் பார்க்கும் வசதி இந்தியாவில் வர உள்ளது.
இணைய இணைப்பு இல்லாமல் நேரடியாக மொபைல் போன்களுக்கு வீடியோ மற்றும் மல்டிமீடியா ஒளிபரப்பு உள்ளடக்கத்தை வழங்க அனுமதிக்கும் இந்த D2M (Direct to Mobile) தொழில்நுட்பம் சோதனையில் உள்ளது.
அவசரகால எச்சரிக்கைகளை வழங்குவதற்கும் பேரிடர் மேலாண்மைக்கு உதவுவதற்கும் இந்த D2M தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
D2M தொழில்நுட்பம், FM வானொலியின் அதே தொழில்நுட்பக் கொள்கையில் செயல்படுகிறது.
லாவா மற்றும் HMD போன்ற போன் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்கனவே ரூ2,000 முதல் ரூ.2,500 வரை விலையுள்ள D2M தொழில்நுட்பம் இயங்கும் போனை உருவாக்கி வருகிறது.
முதற்கட்டமாக, இந்திய அரசின் நிறுவனமான பிரசார் பாரதியின் உள்ளடக்கங்கள் இந்த போன்களில் நேரலை செய்யப்படும்.
அடுத்த 9 மாதங்களில் நாட்டின் முக்கிய நகரங்களில் சோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஜியோ, ஏர்டெல் போன்ற மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan