Paristamil Navigation Paristamil advert login

டகாட்டா ஏர்பேக் நெருக்கடி : பிரான்சில் 18 லட்சம் வாகனங்கள் இன்னும் ஆபத்தில்!!

டகாட்டா ஏர்பேக் நெருக்கடி : பிரான்சில் 18 லட்சம் வாகனங்கள் இன்னும் ஆபத்தில்!!

3 மார்கழி 2025 புதன் 21:45 | பார்வைகள் : 2166


டகாட்டா (Takata) ஏர்பேக்குகள் தொடர்ந்து மரணங்களையும் கடும் காயங்களையும் ஏற்படுத்தி வருவதால், பிரான்சில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

நியூ கலிடோனியா மற்றும் லா ரீயூனியனில் சமீபத்தில் ஏற்பட்ட இரண்டு மரணங்கள், ஏர்பேக்குகளின் குறைபாடுகளின் தீவிரத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. அம்மோனியம் நைட்ரேட் என்ற வாயுவால் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்களுக்கு காரணமாகின்றன, இது குறிப்பாக வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில், காலப்போக்கில் சிதைவடையும் ஒரு வாயுவாகும்.

ஜூலை முதல் அக்டோபர் வரை 6 லட்சம் வாகனங்கள் சீரமைக்கப்பட்டிருந்தாலும், பிரான்சிலும், வெளிநாட்டு பிரதேசங்களிலும் இன்னும் 18 லட்சம் வாகனங்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளது.

ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) உள்ளிட்ட பல கார் தயாரிப்பாளர்கள் பெருமளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்; சிட்ரோயன், DS மற்றும் ஓபெல் பிராண்டுகளுக்கான வாகனங்களில் 70 % ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அரசு மற்றும் நீதித்துறையும் இந்த விவகாரம் பற்றி விசாரணைகளை வேகப்படுத்தியுள்ளது. 

UFC–Que Choisir உள்ளிட்ட அமைப்புகளின் புகார்களைத் தொடர்ந்து, வோல்க்ஸ்வேகன், டொயோட்டா, பிஎம்டப்யூ போன்ற பல நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்