பயங்கரவாத அச்சுறுத்தல்! - பாதுகாப்பு பலப்படுத்தலில் கிறிஸ்மஸ் சந்தைகள்!
3 மார்கழி 2025 புதன் 19:00 | பார்வைகள் : 3056
பயங்கரவாத தாக்குதல்களுக்காக அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு கிறிஸ்மஸ் சந்தைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டிசம்பர் - பொது இடங்கள், சந்தைகள் என கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் மாதமாகும்.கிறிமஸ் சந்தைகள், இசை நிகழ்ச்சிகள், மலிவு விற்பனை நிலையங்கள், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், புதுவருட கொண்டாட்டங்கள் என களைகட்டும் மாதத்தில், பயங்கரவாத அச்சமும் எழுந்துள்ளது.
உள்துறை அமைச்சர் Laurent Nunez இன்று புதன்கிழமை தெரிவிக்கையில், கிறிஸ்மஸ் சந்தைகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. ’உச்சபட்ச’ எச்சரிக்கையாக இது கருதப்படுகிறது.
கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் இடம்பெற்ற தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டும், 200 பேர் காயமடைந்தும் இருந்ததனர். அதே போன்ற ஒரு தாக்குதலை பிரான்சில் நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு, ‘டெலிகிராம்’ செயலி ஊடாக தகவல் பரிமாறப்பட்டதாகவும், அதை பிரெஞ்சு உளவுத்துறை ஒட்டுக்கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுவருட வரவேற்பு கொண்டாட்டத்தின் போது சோம்ப்ஸ்-எலிசேயில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இறுக்கமான நடவடிக்கைகள், சோதனைகள் என பாதுகாப்பு வலுப்படுத்தப்பட உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan