இலங்கையில் தொற்று நோய் அபாயம் – சுகாதார துறை எச்சரிக்கை!
3 மார்கழி 2025 புதன் 16:43 | பார்வைகள் : 579
இலங்கையில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“அண்மையில் நாட்டைப் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என சுகாதாரத் துறையினர் என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் பரவும் கடுமையான ஆபத்து நிலவுகிறது.
அதேபோல், தொற்று அல்லாத நோய்களிலும் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளின் சிகிச்சை நிலைமைகள் தற்போது குழப்பமான நிலையை அடைந்துள்ளன. அவர்களின் மருந்துகள் இந்த அனர்த்த நிலைமை காரணமாகத் தொலைந்திருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தி வருகிறோம்.”






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan