ஹொங்கோங் தீ விபத்து - விசாரணை செய்ய சுயாதீனக்குழு நியமனம்
3 மார்கழி 2025 புதன் 16:43 | பார்வைகள் : 121
ஹொங்கோங் தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து குறித்த விசாரணை செய்ய அந்நாட்டு நீதிபதி தலைமையிலான சுயாதீனக்குழு ஒன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் புதன்கிழமை (26) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீரமைப்பு பணிகளின் போது பயன்படுத்தப்பட்ட தரமற்ற பிளாஸ்டிக் வலை மற்றும் காப்பு நுரை, அதிகமாக வீசிய காற்று போன்றவற்றால் தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு முயற்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்துடன் தொடர்புடைய 13 பேர் பேரையும், மேலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 12 பேரையும் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan