அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் உயர்வு!!
3 மார்கழி 2025 புதன் 14:00 | பார்வைகள் : 246
2026 பிப்ரவரி 1 முதல், அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் சராசரியாக 0,86% உயர்த்தப்படவுள்ளன என்று போக்குவரத்து அமைச்சகம், டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்துள்ளது.
அரசு மற்றும் குத்தகை நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு இடையிலான வருடாந்திர ஒப்பந்த மறுபரிசீலனையின் ஒரு பகுதியாக இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இது பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
இந்த கட்டண மாற்றம், பிரான்சில் உள்ள ஏழு குத்தகை நெடுஞ்சாலை வலையமைப்புகள் (APRR, Area, ASF, Cofiroute, Escota, Sanef, SAPN) மீது பயணிக்கும் தனியார் வாகனங்களுக்கு பொருந்தும். உண்மையான கட்டண அட்டவணைகள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அமைச்சரின் உத்தரவில் அங்கீகரிக்கப்படும்.
போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, இது 2021 முதல் காணப்படும் மிகக் குறைந்த கட்டண உயர்வாகும். ஒப்பிடுவதற்காக, 2025 இல் கட்டணங்கள் 0,92% உயர்ந்தன, 2024 இல் 3% மற்றும் 2023 இல் 4,75% உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan