Paristamil Navigation Paristamil advert login

2026-ல் இந்தியாவில் VinFast மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

2026-ல் இந்தியாவில் VinFast மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

3 மார்கழி 2025 புதன் 11:44 | பார்வைகள் : 113


வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளர் VinFast, 2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது முதல் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

தற்போது, நிறுவனம் இந்திய சந்தைக்கு ஏற்ற மொடல்களை தெரிவு செய்யும் நோக்கில் ஆய்வு நடத்தி வருகிறது.

VinFast உலகளவில் Feliz, Klara Neo, Evo Grand, Vero X, Vento S, Theon S போன்ற மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது.

இவை 60-99 kmph வேகத்தில் செல்லக்கூடியவை. சில மாதிரிகள் 160 km வரை பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரியுடன் வருகின்றன.

இந்தியாவின் சாலை நிலை, வானிலை, தினசரி பயண தேவைகள் ஆகியவற்றுக்கு ஏற்ற மொடல்களை நிறுவனம் சோதனை செய்கிறது.

விலை நிர்ணயம், உற்பத்தி உள்ளூர்மயமாக்கல், சார்ஜிங் வசதி மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை ஆகியவை VinFast-க்கு முக்கிய சவால்களாக உள்ளன.

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தை தற்போது TVS, Ather Energy, Bajaj Chetak, Hero Vida போன்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

VinFast, தனது ஸ்கூட்டர்களை 2026 இறுதியில், குறிப்பாக பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், VinFast-ன் நுழைவு போட்டியை மேலும் தீவிரப்படுத்தும். விலை, தரம் மற்றும் சேவை ஆகியவற்றில் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டால், இந்திய EV சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்