பிரேசில் உயிரியல் பூங்காவில் சிங்கத்திடம் மாட்டியவருக்கு நேர்ந்த கதி
3 மார்கழி 2025 புதன் 11:44 | பார்வைகள் : 100
பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
இதனை காண நண்பர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர்.
அதில் மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஆர்வ மிகுதியில் தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்றார்.
பின்னர் அங்கிருந்த ஒரு மரம் வழியாக கீழே இறங்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு சிங்கம் அவரை தாக்கி இழுத்து சென்றது.
இதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan