2030-க்குள் பெட்ரோல் வாகன விலைக்கு சமமாக மின்சார வாகனங்கள் கிடைக்கும் - டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
2 மார்கழி 2025 செவ்வாய் 19:42 | பார்வைகள் : 114
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், 2030-க்குள் மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் புதிய வாகன விற்பனையில் EV-கள் 5 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கை வகிக்கின்றன. கடந்த ஆண்டு இது 2.5 சதவீதம் மட்டுமே இருந்தது.
டாடா மோட்டார்ஸ் CEO ஷைலேஷ் சந்திரா, 2030-க்குள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் மூன்றில் 1 பங்கு EV-களாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் EV ஏற்றுக்கொள்ளல் வேகமாக அதிகரிக்கிறது. சீனா, ஐரோப்பாவில் வளர்ச்சி மந்தமாகும் நிலையில், இந்தியா உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
டெஸ்லா, VinFast உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைந்துள்ளன.
டாடா மோட்டார்ஸின் EV சந்தைப் பங்கு கடந்த ஆண்டு 59 சதவீதம் இருந்த நிலையில், இவ்வாண்டு முதல் 8 மாதங்களில் 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.
JSW MG Motor India 30 சதவீத பங்கையும், மகிந்திரா & மகிந்திரா 22.6 சதவீத பங்கையும் பெற்றுள்ளன.
EV உற்பத்தியில் பயன்படுத்தப்படும் power & control systems பல்வேறு தனித்தனி பாகங்களிலிருந்து ஒரே module-ஆக இணைக்கப்படுகின்றன. இதனால் உற்பத்தி செலவு குறைந்து, திறன் அதிகரிக்கிறது.
2030-க்குள், 400 கி.மீ. பயணிக்கும் திறன் கொண்ட EV-கள், பெட்ரோல் வாகன விலைக்கு சமமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சார்ஜிங் வசதி குறைவாக இருப்பதால், ஹைபிரிட் வாகனங்கள் போட்டியாக இருக்கலாம்.
மத்திய அரசு, பெட்ரோல் வாகனங்களுக்கு வரி குறைப்புகளை அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், மலிவு மற்றும் பிரீமியம் EV-களை அறிமுகப்படுத்தி, 45-50 சதவீத சந்தைப் பங்கைக் கைப்பற்றும் இலக்குடன் செயல்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan