Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்திற்கான எரிவாயு சிலிண்டர்கள் குறித்து வௌியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கான எரிவாயு சிலிண்டர்கள் குறித்து வௌியான அறிவிப்பு

2 மார்கழி 2025 செவ்வாய் 17:34 | பார்வைகள் : 113


யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3,729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு விநியோகம் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், நாளை 1,716 சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2,217 சிலிண்டர்களும் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கட்டம் கட்டமாகத் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்