Paristamil Navigation Paristamil advert login

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?

நடிகர் கமல்ஹாசன்  சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?

2 மார்கழி 2025 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 113


நடிகர் கமல்ஹாசன் நடிகராக மற்றும் அரசியலிலும் பிஸியாக உள்ளார். அவரிடம் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியை ரசிகர்கள் பழைய கூட்டணியாக பார்க்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் கூறியதாவது, "ரசிகர்களுக்கு புது கூட்டணி தேவை என்றால் பழைய கூட்டணி வேண்டாம் என்றால் அவர்களே ரிட்டையர்டு பண்ணி வைத்து விடுவார்கள். நான் எப்போது ஒரு மோசமான படம் நடித்தாலும் அப்போது எல்லாம் ரிட்டையர்டு ஆக வேண்டும் என நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் என்னிடம் மோசமான படத்துடன் ரிட்டையர்டு ஆக வேண்டாம். நல்ல படம் நடித்து அதனுடன் ரிட்டையர் ஆகலாம் என்றனர். அதனால் நான் அந்த ஒரு நல்ல படத்தை தேடி ஓடி கொண்டு இருக்கிறேன்" என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்