Paristamil Navigation Paristamil advert login

‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்?

‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்?

2 மார்கழி 2025 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 111


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ரஜினியின் முந்தைய படமான 'கூலி' திரைப்படத்தில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் இந்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், அதேபோல் 'ஜெயிலர் 2' படத்தை இந்தியில் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக ஷாருக்கானுக்கு ஒரு சின்ன கேரக்டர் இயக்குனர் நெல்சன் வைத்திருப்பதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ஷாருக்கானும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் சிவராஜ்குமார், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த பட்டியலில் ஷாருக்கான் இணைகிறார்.

அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்