Paristamil Navigation Paristamil advert login

வாரிசு பட இயக்குனர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கிறாரா ?

வாரிசு பட இயக்குனர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கிறாரா ?

2 மார்கழி 2025 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 107


தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் ‘வாரிசு’, ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வம்சி. அவரது இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, அமீர் கானுக்கு கூறப்பட்ட அதே கதையில் தெலுங்கு நடிகரும் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவின. இந்த நிலையில் தற்பொழுது திடீர் திருப்பமாக, அந்த கதையில் வம்சி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை தில் ராஜூ, ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து வருகிறார் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்