இலங்கையில் பேரிடர் இறப்புகள் 400ஐ தாண்டியது - 336 பேரைக் காணவில்லை!
2 மார்கழி 2025 செவ்வாய் 15:13 | பார்வைகள் : 121
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அனர்த்தம் காரணமாக 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
313,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,51,776 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (30) மாலை 4 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் கண்டி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன,.
இதன்படி இந்த மாவட்டத்தில் 88 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 155 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 62 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளை மாவட்டத்தில் 71 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 53 பேர் காணாமல் போயுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan