அவதானம்! - நாளை வேலை நிறுத்தம்! - போக்குவரத்து பாதிப்பு!!
1 மார்கழி 2025 திங்கள் 19:09 | பார்வைகள் : 149
நாளை டிசம்பர் 2 ஆம் திகதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து, பொது போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிறது. CGT, FSU மற்றும் Solidaires உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
போக்குவரத்து!
RATP இற்கு சொந்தமான போக்குவரத்துக்கள் இன்று மாலை 6 மணி முதல், புதன்கிழமை காலை 7 மணி வரை பாதிப்புக்கு உள்ளாகின்றன. மெற்றோகள், ட்ராம் மற்றும் பேருந்து சேவைகள் சிறிய அளவில் பாதிக்கப்படுகின்றது.
பாடசாலைகள்!
பாடசாலைகளில் ஆசிரியர் வருகை பாதிக்கப்படும் எனவும், இதனால் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிற்றுண்டிச் சாலைகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனை!!
மருத்துவத்துறையும் பாதிக்கப்படும் எனவும், தாதியர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதால் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்!!
அத்தோடு Bordeaux, Lens, La Rochelle, Dijon, Châteaubriant, Douai, Rouen மற்றும் Le Havre போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan