சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரான்சின் உறுதியான ஆதரவு!!
1 மார்கழி 2025 திங்கள் 15:03 | பார்வைகள் : 207
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (CPI) சுயாதீன பணியை பிரான்ஸ் முழுமையாக ஆதரிக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜோன்-நோயல் பரோ மீண்டும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, நீதிமன்றத்தை அங்கீகரிக்காமல், பிரான்சுக்காரர் நிக்கோலா கியூலு உட்பட (Nicolas Guillou), நான்கு CPI நீதிபதிகளுக்கு பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படுவது மாதிரியான தண்டனைகளை விதித்துள்ளது. இந்தத் தண்டனைகள் அவர்களின் மின்னஞ்சல் மற்றும் வங்கி சேவைகளுக்கான அணுகலை தடுத்து, அவர்கள் தங்கள் பணியை செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக் (La Haye )நகரில் நடைபெறும் 24வது அமர்வில் CPIக்கு நிர்வாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ள நிலையில், பிரான்ஸ், அமெரிக்க நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்களை கண்டித்து, அதனை பாதுகாக்கத் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானின் விரைவில் ஹேக்கிலுள்ள CPI அலுவலகங்களுக்கு சென்று நிலைமையை சமாளிக்கும் தீர்வுகளைத் தேட உள்ளார். போர் நிலங்களில் வன்முறை மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் CPI–ஐ வலுப்படுத்துவது அவசியம் என பரோ நினைவூட்டி உள்ளார்.
நீதிமன்றம் சுதந்திரமாக விசாரணைகளைத் தொடங்கி, அவற்றை நிறைவு செய்து, தேவையானபோது தண்டனைகளை அறிவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே பிரான்சின் கருத்தாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan