வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவு - முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து
1 மார்கழி 2025 திங்கள் 13:28 | பார்வைகள் : 801
பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்கின்றது.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan