ஜேர்மனியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை - பல பொலிஸார் காயம்
1 மார்கழி 2025 திங்கள் 13:28 | பார்வைகள் : 103
ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ' ஜேர்மனிக்கான மாற்று' என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக ஏ.எப்.டி., செயல்பட்டு வருகிறது.
இதன் இளைஞர் பிரிவான ' ஜேர்மனிக்கான மாற்று' என்ற அமைப்பை, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் 'தீவிரவாதக்குழு'வாக வகைப்படுத்தியிருந்தது.
இதையடுத்து, அது கலைக்கப்பட்டு, 'ஜேர்மன் தலைமுறை' என்ற புதிய இளைஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது.
இதன்போது நகரின் முக்கிய பகுதிகளில் 30,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதைத் தடுக்க முயன்ற பொலிஸாருடன் போராட்டகாரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 15 பொலிஸார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan